தமிழ்நாடு

கஜா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையா ? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

கஜா புயல் பாதிப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

தந்தி டிவி

கஜா புயல் பாதிப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

* இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு கேட்டதற்கிணங்க தமிழக அரசு அளித்த விளக்கங்கள் போதுமானவையாக இல்லை என்றும், மீண்டும் சில விளக்கங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* விளக்கம் அளிக்கப்பட்ட 2 நாட்களில் மத்திய குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும், அதனடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு விவாதித்து 2 வாரங்களில் கஜா புயலுக்கான நிவாரண தொகை வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

* தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு கோரிய கூடுதல் விளக்கங்களை நேற்றே அளித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அளித்த விபரங்கள் போதுமானவையா என மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அதன் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்