மதுரை அழகர் மலை கோவிலுக்கு சொந்தம் என கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை பல ஆண்டுகளாக விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அழகர் மலையை கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமென அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், அழகர் மலை பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட எந்த விதமான சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட கூடாது எனவும் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர்.