Madurai | 16 ஆண்டுகளுக்கு பின் வீட்டில் எரிந்த விளக்கு - அமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண் மதுரை பனையூரில் 16 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் தவித்து வந்த பெண், அமைச்சரின் நடவடிக்கையால் மின்சாரம் வழங்கப்பட்டது. கடந்த 16 வருடங்களாக தனது வீட்டிற்கு மின்சாரம் வழங்கக்கோரி பல முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். அதைதொடர்ந்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் தான் மனு அளித்ததாகவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய மின்கம்பம் அமைத்து அவரது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கியதாக தெரிவித்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டில் மின்விளக்கு எரிந்ததை பார்த்து, தனது பிள்ளைகளுடன் கண்ணீர் விட்டு அழுததாக நந்தினி தெரிவித்தார்.