நீதித்துறை மற்றும் முக்கிய பொது சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் உண்மையான பொதுநல நோக்கம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ள நிலத்தை திரும்பப் பெற்று, நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. காலி இடத்தில் செயல்படும் துணை மின்நிலையம் மூலம் உயர்நீதிமன்றம், அரசு மருத்துவமனை, துறைமுகம் உள்ளிட்டவற்றுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மின்விநியோகம் பாதிக்கப்படும் என்பதால் வழக்கை தள்ளுபடி செய்தனர்.