தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு...

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

* அந்த மனுவில், நீர்நிலைகளில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

* இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, திருப்பரங்குன்றம், அனுப்பானடி, மேலமடை, செல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

* ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் வருகிற 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி 15 நிமிடத்திற்கு ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Karnatana Landslide| கர்நாடகாவில் நில பிரளயம்.. பறிபோன உயிர்கள்.. பதற்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலை

Indian Railway | "வேறு நபர் பயணம் குற்றம்" - ரயில்வே முக்கிய அறிவிப்பு

Trichy | ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு - சிக்கிய ரூ.3.5 கோடி.. பார்த்து பதறிய அதிகாரிகள்

Palayamkottai | பாளையங்கோட்டையில் அதிரடியாக இறங்கிய போலீஸ்.. துப்பாக்கியுடன் கொத்தாக சிக்கிய 7 பேர்

Rowdy Death | ஆளில்லா கட்டடத்தில் A பிரிவு ரவுடியின் சடலம்.. அலசும் போலீசார்