தமிழ்நாடு

கையில் கத்தியோடு கடையில் புகுந்து.. சின்னாபின்னமாக வெட்டிய கும்பல் -மானாமதுரையில் உச்ச கட்ட பரபரப்பு

தந்தி டிவி

சிவகங்கையில் இளம் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய ஆத்திரத்தில், இளைஞரின் தாய்மாமா டீக்கடைக்குள் அரிவாளுடன் புகுந்த பெண் வீட்டார், கடையை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள சிப்காட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் பக்கத்து வீட்டு இளைஞரை வெகு நாட்களாக காதலித்து வந்திருக்கிறார். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காதலர்கள் இருவரும் திடீரென வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பெண் வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, இளைஞரின் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்த அவர்கள், ஊருக்குள் டீக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியான இளைஞரின் தாய்மாமா புஷ்பராஜை கடையை திறக்க கூடாது என மிரட்டியிருக்கின்றனர். இந்நிலையில், வேலையாட்கள் மூலம் டீக்கடையை புஷ்பராஜ் திறந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் சிலர் கையில் அரிவாளுடன் புகுந்து, டீ மாஸ்டர் ராஜாவை வெட்டி, கடையை சூறையாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்