தமிழ்நாடு

காதலிக்கு நாளை திருமணம் - காதலன் கழுத்தறுத்து கொடூர கொலை

தந்தி டிவி

விளாத்திகுளம் அருகே காதலிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் - சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞரும், அப்பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதல் விவகாரம் தெரிந்த நிலையில், பெண் வீட்டார் வேறொரு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்ததாகவும், நாளை திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவையில் பணிபுரிந்து வந்த மாரியப்பன், விளாத்திகுளம் அருகே கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காதலியின் குடும்பத்தினர்தான் இளைஞர் கொலை செய்யப்பட காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது