காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை - உறவினர்கள் மறியல் செங்கல்பட்டில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தையூர் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்ட பிரவீன்குமாரின் உடல், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின் பிரவீன்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளியான சதீஷைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்களும் பொதுமக்களும் புதிய பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் கேளம்பாக்கம் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.