நடுரோட்டிலேயே பற்றி எரிந்த லாரி.. கருகியது பல லட்சம் மதிப்புள்ள அப்பளம் பற்றி எரிந்த லாரி - பல லட்சம் ரூபாய் அப்பளம் சேதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, அப்பளம் ஏற்றி சென்ற லாரி தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.