ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சிவன் கோயிலில், லிங்கத்தை சுற்றி நாக பாம்பு படமெடுத்தபடி நின்றதால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பாதாள கங்கை சந்திரலிங்க கோயிலில் உள்ள சிறிய லிங்கத்தை சுற்றி படமெடுத்தபடி, சுமார் 4 அடி நீள நாக பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சாமி தரிசனம் செய்தனர்.