நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமானால், திமுக தலைவர் கருணாநிதியை போல நடைபயிற்சியையும் உணவு கட்டுப்பாட்டையும் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே நடைபெற்ற காவலர்களுக்கான முழு உடல் பரிசோதனை துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், காவலர்கள் அனைவரும் உடல் பரிசோதனை அட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.