தமிழகத்தில் 3 மாத காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். வழக்கு விசாரணையின் போது பிப்ரவரி ஒன்றாம் தேதிக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.