தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்கள் ஒப்படைக்க உத்தரவு - ஊரடங்கை மீறியதாக 2.8 லட்சம் பேர் கைதாகி விடுதலை

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* மாநிலம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக, 2 லட்சத்து 8 ஆயிரத்து 139 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

* இதுவரை ஒரு லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து 89 லட்சத்து 23 ஆயிரத்து 644 லட்சம்

அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

* இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* அதன்படி, ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாளொன்றுக்கு 10 வாகனங்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்றும்

* அதுவும், நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்கு உள்ளாக வாகனங்கள் ஒப்படைக்கும் பணி நடைபெற வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

* ஒரே நாளில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஒப்படைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

MK Stalin | DMK | திமுக தலைவர் ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்

BREAKING || புதைந்த நேபாள நகரின் தற்போதைய ஷாக் வீடியோ... தோண்ட தோண்ட பிணங்கள்

BREAKING || "நாங்க நலமா இருக்கிறோம்" - நேபாளில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ

BREAKING || "தமிழகத்தில் செப்.2 வரை..." - சுட சுட வந்த ஷாக் தகவல்

ParaMedical Counselling | துணை மருத்துவ படிப்பு - மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு