கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளித்த தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வருகிற 19ஆம் தேதி முதல், அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆட்சியர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளியின் அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிக பட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.