இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் திங்கட் கிழமை முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உணவகம், தேநீர் கடைகள், நடைபாதை கடைகள் பேக்கரி, இனிப்பு, கார வகை கடைகள் இரவு 9 மணி வரை செயல்படலாம் என்றும்,
50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திங்கட்கிழமை முதல் புதுச்சேரிக்கான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கான பேருந்து சேவைக்கு தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்து தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.