வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தந்த மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் வழங்கி வருகிறார். மேலும், ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும், பொதுப் போக்குவரத்து தடையை நீக்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.