நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்கள் ஊரடங்கால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அங்கு வசிப்பவர்கள் நகரங்களுக்கு செல்ல தயங்குகிறார்கள். கிராமத்திற்குள் வெளி ஆட்களையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. வாகன வசதி இல்லாததால் மருத்துவ தேவைக்கு குன்னூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.