திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியின் இரண்டாவது வார்டு உறுப்பினராக 23 வயது இளம்பெண் சிந்துஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வரும் சிந்துஜாவுக்கு எந்தவொரு அரசியல் பின்புலம் இல்லாத நிலையில், 161 வாக்குகள் பெற்று லால்குடி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்றியுள்ளார்.