உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளையும், கூட்டணியையும் ஆதரிக்க உள்ளதாக மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. மதவாத கட்சியுடன் கூட்டணியில் உள்ளதால் அவர்களை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் அவை அடிமட்ட கிராமங்கள் வரை வேர் விட வழிகோலும் என்றும் பேராயர் அந்தோணி பாப்புசாமி கூறினார்.