தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக-வின் புதிய மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்ற தலைமை நீதியிடம் மனுவை தாக்கல் செய்தார். 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, பின்பு உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்