தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? - தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டமும் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதற்கிடையே அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்றுள்ளன. உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தேர்தல் டிசம்பரிலும் இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி மாதத்திற்குள்ளும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்