தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

தூத்துக்குடி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

thanthitv

தூத்துக்குடி அருகே ஆம்னி பேருந்து ஒன்று, தண்ணீர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, தூத்துக்குடி எட்டையபுரம் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில், ஆம்னி பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து, ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விபத்தால் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

PM Modi | Smith Machchhar | "இந்தியர்கள் உயிரை கொடுத்து காப்பவர்கள்.." - PM மோடி நெகிழ்ச்சி பேச்சு

TN GOVT | ``இனி சனிக்கிழமை செயல்படாது’’ - தமிழக அரசு அறிவிப்பு.. மக்களே போய்ஏமாந்துடாதீங்க

Smit Machchhar ரத்தம் சிந்தி உயிர்களை காத்த இந்திய பைலட் - போன் போட்டு பிரதமர் மோடி சொன்ன வார்த்தை

Sriperumbudur | Crime | நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கொலை வழக்கு குற்றவாளி ரவுடி..

Today Gold Price | அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. முதல்முறையாக 14 கேரட் தங்கத்திற்கு..