தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே, நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தில் இருவர் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
ராஜகோபாலபேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், இருதரப்பினரும் அரிவாளால் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதில் நடராஜன் என்பவருக்கு தலையில் பலத்த காயமும், பரமசிவன் என்பவருக்கு கை, கால்களில் காயமும் ஏற்பட்டது.
இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இருதரப்பினரும் அரிவாளால் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.