தமிழ்நாடு

சரக்கு வாகனங்களில் தமிழகம் வரும் மதுபானங்கள்... சோதனையில் பெட்டி பெட்டியாக சிக்கும் மதுபானம்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மதுபானங்கள் எல்லையில் பெட்டி பெட்டியாக சிக்கி வருகிறது.கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

தந்தி டிவி

சரக்கு வாகனங்களில் தமிழகம் வரும் மதுபானங்கள்... சோதனையில் பெட்டி பெட்டியாக சிக்கும் மதுபானம்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மதுபானங்கள் எல்லையில் பெட்டி பெட்டியாக சிக்கி வருகிறது.கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகவில் இருந்து, தமிழகத்துக்கு மதுபானங்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் கர்நாடக, தமிழக எல்லையான ஜுஜுவாடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.ஒசூர் கலால் போலீசார் நடத்திய சோதனையில், பெரும்பாலான சரக்கு வாகனங்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரிய வந்தது இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்