தமிழ்நாடு

"தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கிட்டத்தட்ட 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் வெறும் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

* குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

* இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் வேலூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளன. சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டம், எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 355 அரசு பள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

* சென்னையில், 55 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர். இந்த முடிவுகள் அனைத்தும் சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு