தமிழ்நாடு

சத்தியமங்கலம்: கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை குட்டிகள் - வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டியபோது அங்கு சிறுத்தை குட்டிகள் இருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் அ​​ங்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை குட்டிகளை மீட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சிறுத்தை, கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு, குட்டிகளை ஈன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்