தமிழ்நாடு

சட்டப்பல்கலை. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று துவங்கியது.

தந்தி டிவி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசையின்படி கட் - ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் படிப்புகளான B.Com LLB, BCA LLB படிப்புகளுக்கான சேர்க்கையை சட்ட துறை அமைச்சர் சிவி.சண்முகம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலந்தாய்வில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையையும் வழங்கினார்.

இதையடுத்து, 5 ஆண்டு படிப்பான BA LLB, BBA LLB படிப்பில் சேருவதற்கு, நாளை ஜூன் 18-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்