தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு ADGP ஆயுதப்படை DGP-ஆக நியமனம்

தந்தி டிவி

70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு

70 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் 3 டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும், 15 எஸ்பிக்கள் டிஐஜிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சட்டம்–ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆயுதப்படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு, சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், அதே பிரிவில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பால நாகதேவி, டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு, சிவில் சப்ளை சிஐடி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல சிபிசிஐடி ஐஜி அன்பு, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு ஆவடி ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், தலைமையக கூடுதல் டிஜிபியாகவும்.. ஆவடி ஆணையர் சங்கர், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்