இந்தியாவின் இசை குயில் லதா மங்கேஷ்கரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். எட்டு தசாப்தங்களாக பல்வேறு மொழிகளில் பாடிய தனது பாடல்கள் மூலம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் வருடியவர் லதா மங்கேஷ்கர் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். லதாவின் மறைவால் தவிக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் ட்விட்டரில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.