தமிழ்நாடு

Theft | Diwali | கொத்துக்கொத்தாக நகை, பணம் கொள்ளை - சென்னை அருகே பயங்கரம் | Thiruvallur

கொத்துக்கொத்தாக நகை, பணம் கொள்ளை - சென்னை அருகே பயங்கரம் | Thiruvallur

thanthitv

Theft | Diwali | கொத்துக்கொத்தாக நகை, பணம் கொள்ளை - சென்னை அருகே பயங்கரம் | Thiruvallur

#thiruvallur #theft #diwali #thanthitv

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை திருவள்ளூர் அருகே, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குச் சென்ற தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெள்ளவேடு அருகே குத்தம்பாக்கம், கன்னடபாளையம் பகுதியில் வசிக்கும் தண்டபாணி, கடந்த 7-ஆம் தேதி குடும்பத்துடன் கடலூருக்குச் சென்றுள்ளார். இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Heavy Rain Prediction | Weather report | இன்று கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்ட காரங்க உஷார்

Firecrackers| கையில் வைத்து பட்டாசு வெடித்த சிறுவன் பரிதாப மரணம்

மாணவிகளை சந்திக்க வந்த ஆண் நண்பர்களால்.. சென்னை புஷ்பா நகரில் பயங்கரம்.. பெரும் அதிர்வலை

Tenkasi | Elephant attack | காட்டுயானை தாக்கி ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர் பலி

Cancer Tablets| விலை அதிரடி குறைப்பு.. நாடு முழுக்க அமலுக்கு வந்தது