தமிழ்நாடு

நிலத்தகராறு பிரச்சினை : தந்தை, மகன் கொடூரமாக வெட்டிக் கொலை...

நிலத்தகராறு பிரச்சினைக்காக பேச்சுவார்த்தைக்கு அழைத்து தந்தை- மகன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவர் களமாவூர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் இருந்து ஒண்ணேகால் கோடி ரூபாய் மதிப்பில் நிலத்தை வாங்கியுள்ளார். நிலத்தை வாங்கிய பிறகும் மூர்த்தி அந்த இடத்தை காலி செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக வீராசாமிக்கும் மூர்த்திக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மூர்த்தி வீட்டிற்கு வீராச்சாமி, அவரது மகன் முத்து மற்றும் வீராசாமியின் உறவினர்கள் என நான்கு பேர் பேச்சுவார்த்தைக்காக வந்துள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த சிலர் வீராசாமி மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் வீராசாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்காக அழைத்து தந்தை மகனை வெட்டிக்கொன்ற சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட பாணியில் நடந்த இந்த இரட்டை கொலை புதுக்கோட்டை அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்