சின்னகளக்காடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, சுமார் 48 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த ஏரி நிரம்பிய நிலையில், மதகு திடீரென உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய நீர், விவசாய நிலங்களுக்குள் பாய்ந்தது. சுமார் 100 ஏக்கர் நிலப் பரப்பளவில் பயிரிட்டப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் புதிய மதகு அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.