தேனி குரங்கணி மலை கிராமத்தில் தமிழக அரசு அனுமதியுடன் மீண்டும் மலையேற்றம் தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு குரங்கணியில் தீ விபத்து காரணமாக மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு மலையேற்றம் தடை செய்யப்பட்டது. இப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மலையேறும் சுற்றுலா பயணத்திற்கு 40 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.