தமிழ்நாடு

குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமிக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி

தந்தி டிவி

குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் வளர்ந்து வந்த சுப்புலட்சுமி என்ற யானை, 53 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த‌து. 2 நாட்களுக்கு முன்பு கோயில் யானை நின்றுக்கொண்டிருந்த கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த சுப்புலட்சுமி யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌து. கோயில் நிர்வாகத்தினர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர், சுப்புலட்சுமி யானைக்கு அஞ்சலி செலுத்தினர். தகவல் அறிந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். சுப்புலட்சுமி யானையை பார்த்து பக்தர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். லாரியில் சுப்புலட்சுமி யானையின் உடல் ஏற்றப்பட்டு, மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்தும், ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பக்தர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்