தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் வேல் விவகாரம் - காவல்நிலையம் முற்றுகை -

சாலையில் வேல் வரைந்தவர்கள் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தவர்களை கண்டித்து கோவையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிலர் வேல் வரைந்தனர். சுந்தராபுரம், குனியமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் குறுக்கே வேல் வரையப்பட்டு வெற்றி வேல், வீர வேல் என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குனியமுத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், முருகர் பாடல் பாடி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. அப்போது, காவல் துறையினர் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்