கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திமுக ஒன்றிய தலைவர் யாகம் நடத்தியதை ஆதரித்தும், எதிர்த்தும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அண்மையில் நடந்த கூட்டத்தில், தங்களுக்கு தெரிவிக்காமல் யாகம் நடத்தியது ஏன் என கேள்வி எழுப்பிய அதிமுக மற்றும் திமுக வினரிடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அலுவலக கண்ணாடி உடைந்த நிலையில், டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனிடையே, திமுக யாகத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியும், எதிர்த்து அமமுகவும் சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.