தமிழ்நாடு

காருக்குள் இருந்த துப்பாக்கி : கார் கண்ணாடியை உடைத்து திருடிய கும்பல்

திருச்சி அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து துப்பாக்கி மற்றும் குண்டுகள் திருடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கும்பகோணத்தைச் சேர்ந்த நடையழகன் என்பவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் என்ற பகுதியில் உள்ள உணவகம் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கார் கண்ணாடி உடைக்கும் சப்தம் கேட்க, நடையழகனும் அவரின் மனைவியும் வந்து பார்த்தனர். அப்போது காருக்குள் இருந்த ஐபாட், லேப் டாப், துப்பாக்கி மற்றும் 19 குண்டுகள் திருடப்பட்டதை அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ராம்ஜி நகரைச் சேர்ந்த சுதன் என்பதை உறுதி செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் தலைமறைவாகியுள்ள சுதனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்