கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தனியார் பள்ளி ஒன்று தங்கள் பள்ளிக்கு, மாணவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து வரும் பெற்றோர்களுக்கு
தலைக் கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில், இந்தக் கவசம் வழங்கப்பட்டது. மேலும், தலை கவசத்தோடு வந்த பெற்றோர்களை பாராட்டி, சால்வை அணிவித்து கவுரவித்தனர்.