டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்பு அரசுநு அறிவிப்பு வெளிவந்த நிலையில், கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கு காய வைத்துள்ளனர். ஆனால் 2 நாட்களை கடந்தும் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அங்கேயே இரவும் பகலுமாக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை
என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 ஆயிரம் மூட்டை நெல்லுடன் விவசாயிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.