தமிழ்நாடு

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு

கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், வளையபேட்டையில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கும்பகோணம் நகராட்சியின் 45 வார்டுகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வளையபேட்டை அக்ரஹாரம் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடைப்பை சரி செய்து தண்ணீரை வீணாக்காமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்