நெல் கொள்முதல் நிலையங்களில், 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய உடனடியாக தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கும்பகோணம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரப்பதம் அறிவிக்கப்படாததால், கொள்முதல் நிலையங்களில், வாரக்கணக்கில் நெல்லை வைத்து அவதிப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.