கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம், சளி தொல்லையால் நடப்பாண்டு யானைகள் முகாமில் பங்கேற்காத நிலையில், தேக்கம்பட்டியில் இருந்து வந்து வழக்கமாக யானைக்கு பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர்கள் குழு இதுவரை வரவில்லை என கூறப்படுகிறது. அத்துடன், முகாம் காலத்தில் வழங்கப்படும் மருந்துகளும், சத்துணவுகளும் கிடைக்காததால், மங்களம் யானை உடல்சோர்வுடன் காணப்படுகிறது. இதனைகண்டு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர். எனவே, மங்களம் யானைக்கு, மருத்துவ குழுவினர் விரைந்து மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.