தமிழ்நாடு

கூடுதல் அணு உலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு : வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தந்தி டிவி

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய அணுமின் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் குமார், கூடுதல் அணுஉலைகள் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை என்பதால், இந்த வழக்கில் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் கோரினார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி