தமிழ்நாடு

தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் யார்...? கே.டி.ராகவனுக்கு அதிக வாய்ப்பு என தகவல்

தமிழக பாஜக புதிய தலைவராக ராகவன் தேர்ந்தெடுப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

தெலங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அக்கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலகினார். இதையடுத்து தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக புதிய தலைவராக ராகவன் தேர்ந்தெடுப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும் ராகவனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராக வானதி சீனிவாசனும், தமிழக பாஜக துணைத் தலைவராக நயினார் நாகேந்திரனும் உள்ளனர். பாஜக மாநில செயலாளர் பொறுப்பில் ராகவன் இருந்து வருகிறார். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி, கோவை (தெற்கு) தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வானதி சீனிவாசன், அகில பாரதிய வித்யார்தி பரிஷத் என்ற அமைப்பில் பணியாற்றி உள்ளார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 2017ல் அமித்ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்.

வழக்கறிஞரான ராகவன் ஆரம்ப காலம் முதலே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றியவர் ஆவார். அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பிலும் இருந்துள்ள ராகவன், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி மற்றும் 2014-ல், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.தற்போதைய நிலையில் தமிழக பாஜக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட ராகவனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் குறித்து பா.ஜ.க. மேலிடம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி