தமிழக அரசியல் நிலவரம் குறித்து சிதம்பரம் தம்மிடம் கேட்டறிந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்மிடம் சிதம்பரம், காஷ்மீரில் ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் பார்வையிட அனுமதி வழங்கிய மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட அனுமதி அளிக்காதது ஏன் என்பது தொடர்பாக மக்களிடம் விவாதிக்க அறிவுறுத்தியதாக கூறினார்.