இரும்பு கம்பியுடன் ஸ்கூல் பஸ்ஸை வழிமறித்து மிரட்டி அநாகரிகமாக பேசிய இளைஞர்கள் - பயத்தில் அலறிய மாணவர்கள் #Krishnagiri #viralvideo #thanthitv கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சேலம் செல்லும் சாலையில் உள்ள ஆவின் பாலகம் அருகே, 4 இளைஞர்கள் போதை நிலையில் வாகனங்களை தடுத்து அட்டகாசம் செய்துள்ளனர்... பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி தகராறு செய்ததுடன், இரும்பு கம்பியுடன் தனியார் பள்ளி பேருந்தையும் வழிமறித்தனர். பேருந்தில் இருந்த மாணவர்களிடம் அநாகரிகமாக பேசி மிரட்டியதால், குழந்தைகள் பயத்துடன் காணப்பட்டனர். சம்பவத்தை கண்ட பொதுமக்களையும் இளைஞர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சில நேரம் பதற்றம் நிலவியது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.