தமிழ்நாடு

"சொத்து வேண்டும் திருமணம் வேண்டாம்" 3.5 கோடியை நைசாக சுருட்டிய பெண் மகன்களோடு சேர்ந்து தீட்டிய நாடகம்

தந்தி டிவி

தர்மபுரியை சேர்ந்தவர் ஜான். தன் மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு, தர்மபுரி மாவட்டம் பன்னிகுளத்தை சேர்ந்த புனிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. புனிதாவுக்கு, ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில், சில வருடங்களுக்கு முன் கணவர் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையேயான பழக்கம் திருமண பேச்சுவார்த்தை வரை சென்றிருக்கிறது. இதனிடையே, கோவையில் வீடு வாடகைக்கு எடுத்த ஜான், அங்கு புனிதா மற்றும் அவரின் மகன்களுடன் வசித்து வந்த நிலையில், சுமார் 3 கோடியே ஐம்பது லட்சம் மதிப்பிலான தன் சொத்துக்களை புனிதாவுக்கும், அவரின் மகன்களுக்கும் எழுதி கொடுத்தாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென இருவருக்குமிடையே தகராறு ஏற்பட, ஜானை திருமணம் செய்ய மறுத்து புனிதா துரத்தியடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஜான், போலீசில் புகாரளித்துள்ளார். இந்நிலையில், போச்சம்பள்ளியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தன் மகன்களுடன் வசித்து வந்த புனிதாவை போலீசார் கைது செய்ய முயன்ற போது, வீட்டின் கதவையடைத்துக் கொண்டு புனிதா தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்