ஓசூர் அருகே ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீரின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிறுவர்களோடு கடந்து பயணிப்பது பார்ப்பவர்களை அச்சமடைய வைத்துள்ளது.
சாந்தபுரம் ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. உபரிநீர் செல்லும் வழியில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வரும் நிலையில், பெரியவர்கள் சிலர் குழந்தைகளுடன் ஆபத்தை உணராமல் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் சிரமத்திற்கு உள்ளாவதால், தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.