தமிழ்நாடு

வரும் 24ல் கிருஷ்ணா நதிநீர் திறப்பு : அக். தொடக்கத்தில் பூண்டி வர வாய்ப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் 24ஆம் தேதி, கிருஷ்ணா நதிநீர் திறக்க வாய்ப்புள்ளது.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் 24ஆம் தேதி, கிருஷ்ணா நதிநீர் திறக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணா நீரை திறக்க அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 24ஆம் தேதி திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர், சில நாட்களில், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்து சேரும் என கூறப்படுகிறது. அந்த தண்ணீர் அக்டோபர் மாத தொடக்கத்தில் பூண்டி நீர்தேக்கத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு-கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்