நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சின்னத்திரை பிரபலமும் சமூக சேவகருமான கே.பி.ஒய் பாலா, கல்லூரி மாணவ-மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடினார். முன்னதாக கல்லூரிக்கு வருகை தந்த அவருக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அரசியல் குறித்துக் கேட்கப்பட்டபோது, தமக்கு அரசியல் பேசத் தகுதியில்லை என்றும் ஈட்டும் சம்பாத்தியத்தை வைத்து தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.